2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

மடுல்சீமையில் சர்வதேச தேயிலை தின கொண்டாட்டம்

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 20 , மு.ப. 07:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(எம்.எப்.எம். தாஹிர்)

அகில இலங்கை, இந்தியா மக்கள் மேம்பாட்டு மையம் ஏற்பாடு செய்த சர்வதேச தேயிலை தினம் நேற்று காலை பசறை, மடுல்சீமையில் கொண்டாடப்பட்டது. இதன்போது மடுல்சீமை இந்து கலாச்சார மண்டம் வரை மலையக கலாச்சாரங்களை பிரதிபலிக்கும் வகையிலான பேரணியொன்று நடத்தப்பட்டதுடன் அதனையடுத்து மடுல்சீமை இந்து கலாச்சார மண்டபத்தில் பல்வேறு நிகழ்வுகளும் இடம்பெற்றன.

மேற்படி மையத்தின் தலைவர் ஆர்.எல்.வரதராஜன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளில் விண்ஷட அதிதியாக இந்திய உயர்தானிகர் அலுவலக பிரதிநிதி சன்ஜிவ் ஜெயின் மற்றும் பேராசிரியர் ஆ.சின்னத்தம்பி, பத்திரிகை நிறுவன அதிபர் ளு.P. சாமி மற்றும் பல்வேறு ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகள், கல்வி பணிப்பாளர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், மலையக புத்தி ஜீவிகள், பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட தோட்ட தொழிலாளர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இதன்போது மலையகத்திற்கு புகழ் சேர்த்த 20பேர் கௌரவிக்கப்பட்டனர். அத்துடன் 2010ஆம் ஆண்டு புலமை பரீட்சை பரீட்சையில் 100க்கும் மேற்பட்ட புள்ளிகளை பெற்ற பாடசாலை மாணவர்களும் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

நிகழ்வுகளின் படத்தில் இந்திய உயர்ஸ்தானிகர் காரியாலய பிரதிநிதி சன்ஜிவ் ஜெயின் மங்கள விளக்கேற்றுவதையும், தோட்ட தொழிலாளி பெண் ஒருவர் மங்கள விளக்கேற்றுவதையும், இந்திய உயர் ஸ்தானிகரிடம் பசறை மடுல்சீம பிரதேச மக்களின் கோரிக்கை அடங்கிய ஆவணம் ஒன்றை அதன் தலைவர் எல்.வரதராஜன் கையளிப்பதையும் கலந்து கொண்டவர்களையும், மாணவர்களின் கலாச்சார நிகழ்வுகளையும் படத்தில் காணலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--