Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Suganthini Ratnam / 2011 ஜனவரி 20 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
(மொஹொமட் ஆஸிக்)
தென்னிந்தியாவில் புகழ் பெற்ற எழுத்தாளரான நாமக்கல் கு.சின்னப்பா பாரதியை கௌரவிக்கும் நிகழ்வொன்று கண்டி தமிழ் சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று புதன்கிழமை மாலை கண்டி வை.எம்.சீ.ஏ மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வு பேராதனை பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறையின் பேராசிரியர் துறை மனோகரன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் உரையாற்றிய தென்னிந்திய எழுத்தாளர் கு.சின்னப்பா பாரதி,
ஒரு நாவலை படித்தால் அவன் உடம்பில் ஒரு இரசாயனம் பாயவேண்டும். அவ்வாறானாலே அது சிறந்த நாவலாகும். புகழுக்கும் பணத்திற்கும் மட்டும் கலை இலக்கியங்களைப் படைக்கக் கூடாது. ஒரு நாவலை வீட்டிலிருந்து எழுத முடியாது. மனிதர்களுடன் வாழ்ந்து அவர்களுடைய துன்பங்களில் பங்கு பற்றி அதன் மூலம் கிடைக்கும் அனுபவத்தை வைத்தே நாவல் படைக்க வேண்டும். நான் எனது ஏழு நாவல்களையும் அவ்வாறே படைத்துள்ளேன். எனவே தான் அவை பல மொழிகளில் மொழி பெயர்க்கப்படுகின்றன என்றார்.
கண்டி தமிழ்ச்சங்கம் சார்பில் தென்னிந்திய எழுத்தாளர் நாமக்கல் கு.சின்னப்பாவுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.
K.Ponnuthurai Saturday, 22 January 2011 03:41 AM
நடன கலைஞர் நாவலாசிரியருக்கு பாராட்டு =பொன்னுத்துரை=
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago