Kogilavani / 2011 பெப்ரவரி 15 , பி.ப. 02:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(மொஹொமட் ஆஸிக்)
பொது நலவாய நாடுகளின் நாடாளுமன்ற அமைப்பின் ஆசிய பிராந்திய பிரதிநிதிகளின் குழு இன்று செவ்வாய்க்கிழமை கண்டிக்கு விஜயம் செய்தது.
இந்திய நாடாளுமன்ற சபாநாயகர் மீரா குமார் உற்பட பாகிஸ்தான் மற்றும் பல நாடுகளின் பிரதிநிதிகளுடன் இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, நாடாளுமன்ற அங்கத்தவர் ஏ.எச்.எம். அஸ்வர் ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.
இவ்விஜயத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர், மத்திய மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தனது உத்தியோக வாசஸ்தலத்தில் இவர்களுக்கு மதிய உணவு விருந்தளித்து கௌரவித்தார்.
இந்நிகழ்வில் மத்திய மாகாண சபை சார்பாக தமிழ் கல்வி அமைச்சர் திருமதி அனூஷியா சிவராசா பிரதிநிதிகளுக்கு நினைவுச் சின்னங்களை கையளித்தார்.
இங்கு உரையாற்றிய இந்திய நாடாளுமன்ற சபாநாயகர் மீரா குமார்
பொது நலவாய ஆசிய பிராந்திய நாடுகளில் இலங்கை முக்கிய இடத்தை வகிக்கிறது. மேற்படி அமைப்பின் அங்கத்துவ நாடுகளுக்கிடையே நீண்ட கலை,கலாசார, சமூக ரீதியான ஒற்றுமைகள் காணப்படுகின்றன என்று தெரிவித்தார்.
.jpg)
.jpg)
04 Jan 2026
04 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
04 Jan 2026
04 Jan 2026