2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

மாணவர்களை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய ஆசிரியர் கைது

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 17 , மு.ப. 02:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

மாத்தளை நகர பிரதேசத்தில் பாடசாஇலை மாணவர்கள் இருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக கூறப்படும்  ஆசிரியரொருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

அத்துடன், இச்சம்பவத்துடன் தொடர்புடையதாக  சந்தேகிக்கப்படும் மாத்தளை மாவட்டத்தைச் சேர்ந்த அரச அதிகாரியொருவரையும் கைதுசெய்வதற்கான நடவடிக்கையில்  பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

நடன நிகழ்ச்சியொன்றுக்கு வருமாறு கூறி இவ்விரு மாணவர்களையும் குறிப்பிட்ட அரச அதிகாரியின் வாகனத்தில் கூட்டிச் சென்றதாக தெரியவந்துள்ளதாக மாத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஆசிரியரை பிரதேசவாசிகள் தாக்கியுள்ளனர். இந்நிலையில், குறித்த ஆசிரியர்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அங்கிருந்து தப்பியோடி தலைமறைவாகி இருந்தபோதே பொலிஸார் கைதுசெய்தனர்.

இது தொடர்பில் மாத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--