Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2011 பெப்ரவரி 23 , மு.ப. 06:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
(மொஹொமட் ஆஸிக்)
கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படும் கண்டி பிரதான வைத்தியசாலையின் பெண் ஊழியர் ஒருவரை காலவரையரையின்றி விளக்கமறியலில் வைக்குமாறு கண்டி உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
குறித்த பெண் ஊழியர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்ததாகக் கூறி கட்டுகஸ்தோட்டை பொலிஸாரால் கைதான நிலையில், கண்டி உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோதே இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
குறித்த பெண் ஊழியர் பதுளை மிகஹகிவுல எனும் இடத்திலிருந்து கஞ்சாவை கொண்டு வந்து கண்டியில் விற்பனை செய்ததாக கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர். இவரிடமிருந்து 31,000 மில்லிக்கிராம் கஞ்சாவை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கட்டுகஸ்தோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜயதிலக்க பண்டார தலைமையயில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
13 minute ago
25 minute ago
31 minute ago