2020 செப்டெம்பர் 30, புதன்கிழமை

உளவு பார்த்து வீடுகளில் திருடிய நபர் கைது

Suganthini Ratnam   / 2011 மார்ச் 01 , மு.ப. 02:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

ஊடகவியலாளர் என்று தம்தை கூறிக்கொண்டு பகல் வேளைகளில் தகவல் திரட்டும் பாணியில் வீடுகளுக்கு சென்று உளவு பார்த்துவிட்டு  இரவில் அவ்வீடுகளில் திருட்டில் ஈடுபட்ட ஒருவரை அலவத்துகொடை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கட்டுகஸ்தோட்டை மற்றும் அலவத்துகொடை பொலிஸ் பிரிவுகளில்  10 வீடுகளை உடைத்து சுமார் ஐந்து இலட்சம் ரூபாய் பெறுமதியான  பொருட்களை இவர் திருடியுள்ளதாக அலவத்துகொடை பொலிஸார் தெரிவித்தனர்.

தொலைக்காட்சி,  கெஸட், வீடியோ கமெராக்கள் உட்பட பல பொருட்களை இவர் திருடியுள்ளதாக பொலிஸார் கூறினர்.

இவர் திருடிய பொருட்கள், பல பிரதேசங்களில் விற்பனை செய்யப்பட்டிருப்பதுடன், இவரிடமிருந்து ஐந்து இலட்சம் ரூபாய் பெருமதியான பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை இன்று செவ்வாய்க்கிழமை கண்டி பிரதான நீதவான் முன் ஆஜர்படுத்தவுள்ளதாக அலவத்துகொடை பொலிஸ்; நிலைய  பொறுப்பதிகாரி நிஷாந்த ஹெட்டியாரச்சி தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .