2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

அடிப்படை வசதிகளற்ற கியூ தோட்ட சிறுவர் பராமரிப்பு நிலையம்

Suganthini Ratnam   / 2011 மார்ச் 02 , மு.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

இந்த நவீன காலத்திலும் தோட்டப்பகுதிகளைச் சேர்ந்த சிறுவர்கள் தமது இளமைக்காலத்தை அடிமைத்தனமாக கழிக்க வேண்டிய நிலையிலுள்ளனர்.

தோட்டப்பகுதிகளைச் சேர்ந்த தாய்மார்கள் தாம் தொழிலுக்குச் செல்லும்போது தமது குழந்தைகளை தோட்டத்திலுள்ள சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் ஒப்படைத்து விட்டுச்;செல்கின்றனர்.

ஆனால் பெரும்பாலான தோட்டப்பகுதி சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் எவ்விதமான அடிப்படை வசதிகளுமில்லாத நிலையே காணப்படுகின்றது. இவ்வாறனதொரு சிறுவர் பராமரிப்பு நிலையமே பொகவந்தலாவை கியூ கீழ்ப்பிரிவு தோட்டத்திலுள்ள சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் காணப்படுகின்றது.

இங்கிருக்கின்ற குழந்தைகளின் சுகாதாரம், வளர்ச்சி என்பனவற்றைக் கருத்திற்கொண்டு தோட்ட நிர்வாகம் இந்த சிறுவர் பராமரிப்பு நிலையத்தை சகல வசதிகளுடன் கூடிய சிறுவர் பராமரிப்பு நிலையமாக ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--