Suganthini Ratnam / 2011 ஜூலை 18 , மு.ப. 10:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(மொஹொமட் ஆஸிக்)
எதிர்வரும் 23ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தலின்போது வாக்குப் பெட்டிகளை பாதுகாப்பதற்கான விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட உபதலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜோசப் மைக்கல் பெரேரா தெரிவித்தார்.
அக்குறணை பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டமொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களிக்கின்ற வாக்காளர்கள் ஒருவித அச்சத்துடன் இருக்கின்றனர். தாம் கட்சிக்கு வாக்களித்தாலும் அதனை பாதுகாத்துக்கொள்ள கட்சிக்கு முடியுமா என்று அவர்கள் சிந்திக்கின்றனர். அதைப் பற்றி சிந்திக்கவே தேவையில்லை. கட்சி அதற்காக ஒரு திட்டத்தை வகுத்துள்ளது.
23ஆம் திகதி காலை 7 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பமாகும் நேரத்திலிருந்து வாக்குகளை எண்ணி பெறுபேறுகளை அறிவிக்கும் வரை இத்திட்டம் அமுலில் இருக்கும். எனவே எவரும் வாக்குப்பெட்டிகளை பாதுகாப்பது சம்பந்தமாக கவலைப்பட தேவையில்லை என்றார்.
2 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
9 hours ago