2021 மே 18, செவ்வாய்க்கிழமை

'ஐ.தே.க.வின் வெற்றி கட்சி ஆதரவாளர்களிடமே உள்ளது'

Suganthini Ratnam   / 2011 செப்டெம்பர் 13 , மு.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

ஐக்கிய தேசிய கட்சியின் வெற்றியானது  கட்சியின் ஆதரவாளர்களிடமே உள்ளதென்பதுடன்,  இதற்கு அரசாங்கத்தால் எதனையும் செய்ய முடியாதெனவும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

கண்டி புஷ்பதான மண்டபத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

'ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றி கட்சி ஆதரவாளர்களின் கைகளிலேயே உள்ளது. அரசாங்கத்தால் அதற்கு எதுவும் செய்ய முடியாது. ஆனாலும் நாங்கள் எமது கட்சிக்கு அதிகளவான வாக்குகள் கிடைப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்சி வெற்றியடைவது வாக்குகளாலேயேயாகும்.  விருப்பு வாக்குகளால் இல்லை. எமது வேட்பாளர்கள் விருப்பு வாக்குகளை பெறுவதற்காக சண்டையிடாது கட்சிக்கு அதிக  வாக்குகளைப் பெற முயற்சித்தால் எம்மால் நிச்சயம் வெற்றியடைய முடியும்' என்றார்.

இதேவேளை, இங்கு உரையாற்றிய  ஐக்கிய தேசிய கட்;சியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க,
'இன்று அரசாங்கம் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றது. தேர்தல்களில் அரசாங்கம் வெற்றியடைவது அதிகரித்த வாக்குகளால் இல்லை.  ஐக்கிய தேசியக் கட்சியினர்  வாக்களிக்கச் செல்லாமையேயாகும். எனவே, எமது ஆதரவாளர்கள் அனைவரையும் வாக்களிக்க செய்வது முக்கியமாகும்' என்றார். 

நாடாளுமன்ற  உறுப்பினர்களான லக்ஷ்மன் கிரியெல்ல, எம்.எச்.ஏ.ஹலீம், ஆர்.யோகராஜன், வசந்த அலுவிஹாரே மற்றும் கண்டி, மாத்தளை, நுவரெலியா மாவட்டங்களில் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .