2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

உயர்தர முதலுதவிப் பயிற்சிநெறி

Kogilavani   / 2011 செப்டெம்பர் 30 , மு.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜவீந்திரா)
இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையினால் அடிப்படை முதலுதவிப் பயிற்சி பெற்று அதில் சித்தியெய்திய தொண்டர்களுக்கு உயர்தர முதலுதவிப் பயிற்சிநெறி சங்கத்தின் மட்டக்களப்புக் கிளைக் காரியாலயத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

கடந்த திங்கட்கிழமை   ஆரம்பமான இப்பயிற்சி நெறியானது  இன்று வெள்ளிக்கிழமையுடன் நிறைவு பெற்றது. இதில் மட்டக்களப்பு மாவட்டத்தினைச் சேர்ந்த சுமார் 25 இற்கு மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

சங்கத்தின் முதலுதவிப் பயிற்றுவிப்பாளர்களான முரளிதரன், ஜீவரெத்தினம், சோமசுந்தரம் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து காண்டு தொண்டர்களுக்கு உயர்தர முதலுதவி தொடர்பான பயிற்சிகளை வழங்கினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .