2021 மே 18, செவ்வாய்க்கிழமை

நாவலப்பிட்டியில பெண் கொலை

Super User   / 2011 செப்டெம்பர் 30 , பி.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.எம். எம். ரம்ஸீன்)

நாவலப்பிட்டி கலபொடை பகுதியில் பெண்ணொருவர் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

உப தபால் அலுவலக அதிபரான 45 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். 
தபால் நிலையத்தை அண்மித்து அமைந்துள்ள இவரது வீட்டில் அதிகாலை வேளையில் புகுந்த குழுவொன்று இவரை வெட்டி கொலை செய்து விட்டு தப்பிச்சென்றுள்ளதாக  பொலிஸ் ஆரம்ப கட்ட விசாரனைகள் மூலம் தெரிய வந்தாக பொலிஸார் கூறினார்.

கொலையாளிகள் இவரைக் கொலை செய்த பின்பு வீட்டை பூட்டி விட்டு தப்பிச் சென்றுள்ளளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேற்படி பெண்ணின் கணவர் கொழும்பில் தொழில் புரிபவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக நாவலப்பிட்டி பொலிசார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .