2021 மே 12, புதன்கிழமை

சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய இளைஞர் விளக்கமறியலில்

Super User   / 2011 ஒக்டோபர் 01 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.எம்.எம்.ரம்ஸீன்)

13 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய இருபது வயது இளைஞரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பளை நீதவான் நேற்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

தௌலஸ்பாகை பகுதியில் அயல் வீட்டு சிறுமியை குறித்த இளைஞர் சுமார் ஆறு மாதகாலத்திற்கு மேலதிகமாக பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

குறித்த சிறுவனின் கையடக்க தொலைபேசியில் ஆபாச படங்களை காண்பித்து சிறுமியை தனது தேவைக்கு பயன்படுத்தி வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரனைகளை கம்பளை,  குருந்துவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0

  • sb Sunday, 02 October 2011 04:27 AM

    அடடா இன்று சிறுவர் தினமடா...!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .