2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2013 ஜூலை 21 , மு.ப. 03:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

தம்புள்ளை, சிகிரியா பிரதேசத்தில் காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று சனிக்கிழமை அதிகாலை தனது விவசாய நிலத்தை பார்வையிடுவதற்காகச் சென்றுகொண்டிருந்த இவரை மரங்களுக்கு இடையில் மறைந்திருந்த காட்டு யானை ஒன்று தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யானையின் தாக்குதலில் படுகாயமடைந்த இந்;த விவசாயி தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

சிகிரியா பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பான விசாரணையை சிகிரியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--