2025 ஜூலை 07, திங்கட்கிழமை

நீர்த் தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

Super User   / 2013 ஜூலை 23 , மு.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.தியாகு

மலையகத்திலுள்ள பிரதான நீர்த் தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் டீ.பி.ஜி.குமாரசிரி தெரிவித்தார்.

தொடர்ந்த பெய்து வரும் மழை காரணமாகவே மலையகத்தின் பிரதான நீர் தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

லக்சபான, கெனியோன், காசல்ரி, மேல்கொத்மலை ஆகிய நீர் தேக்கங்களின் வான் கதவுகளே தற்பொழுது திறக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் டீ.பி.ஜி.குமாரசிரி தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக குறித்த பகுதியின் தாழ் நிலப் பிரதேசங்களில் வசிப்பவர்கள் அவதானமாக இருக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .