2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

விபத்துக்குள்ளான மாணவர்களை கல்வி சேவைகள் அமைச்சர் பார்வை

Kogilavani   / 2013 ஜூலை 24 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எப்.எம். தாஹிர்


மொனராகலை தென்னங்கும்புர தமிழ் வித்தியாலயத்திற்கு கல்வி சேவைகள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க விஜயம்செய்து அண்மையில் விபத்துக்குள்ளான மாணவர்களை பார்வையிட்டதோடு மாணவர்களுக்கு தேவையான பாடசாலை உபகரணங்களையும், உடைகளையும் வழங்கி வைத்தார்.

இதன்போது மாகாண அமைச்சர் குமாரசிறி ரத்நாயக்க ஜனாதிபதியின் ஆலோசகர் வடிவேல் சுரேஷ; உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர்,

'எதிர்காலத்தில் பாடசாலை மாணவர்களுக்கு விசேட காப்புறுதி திட்டமொன்றை அறிமுகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அண்மைக் காலமாக பாடசாலை மாணவர்கள் பல்வேறு விபத்துகளுக்கு இடையிடையே சிக்கி கொள்கின்றனர். இந்நிலையில் பாடசாலை மாணவர்களுக்கு விசேடமாக காப்புறுதி திட்டமொன்றை அமுல்படுத்த  உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அதற்காக இலங்கையில் உள்ள காப்புறுதி நிறுவனங்களுடனும் பேச்சு வார்த்தைகள் மேற்கொள்ளப்படுகின்றன' என அவர் தெரிவித்தார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X