2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

கீழிறங்கிய மஸ்கெலியா – நல்லத்தண்ணீர் வீதி

Suganthini Ratnam   / 2013 ஜூலை 25 , மு.ப. 08:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஆர்.ராஜேஸ்வரன்


மலையகத்தில் தொடர்ச்சியாகப் பெய்த மழையைத் தொடர்ந்து கீழிறங்கிய மஸ்கெலியா – நல்லத்தண்ணீர் பாதையின் குழி பெருத்து வருவதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

இக்குழி ஆரம்பத்தில் சிறியதாக காணப்பட்டபோதிலும், தொடர்ந்து மழை பெய்வதால் பாதை உடைந்து குழியின் அளவு அதிகரிப்பதாகவும்  பிரதேசவாசிகள் கூறியுள்ளனர்;.

மஸ்கெலியா – நல்லத்தண்ணீர் பாதை ஒரு மாதத்திற்கு முன்னர் கீழிறங்கியிருந்தது.

மவுசாகலை  பகுதியிலேயே இப்;பாதை கீழிறங்கி பாரிய குழியொன்று உருவாகியுள்ளது.

இந்த நிலையில், இப்பாதையின் சேதமடைந்த பகுதியில் பயணிப்பவர்களை அவதானத்துடன் செல்லுமாறும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து மழையுடன் கூடிய காலநிலை நிலவுவதால் பாதையின் சீரமைப்புப் பணிகள் தாமதமடைவதாக இப்பகுதிக்கு பொறுப்பான வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--