2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

ஹட்டனில் முள்ளத்தண்டுக்கான இலவச சிகிச்சை முகாம்

Kogilavani   / 2013 ஜூலை 29 , மு.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஆர்.ராஜேஸ்வரன்


முள்ளந்தண்டு பாதிப்புகளை எதிர்நோக்கும் இளைஞர்கள் முதல் முதியவர்களுக்கான இலவச மருத்துவ சிகிச்சை முகாம் ஒன்று நேற்று காலை ஹட்டனில் நடைபெற்றது.

ஜேர்மனில் பிரபல்யமான டோன் சிகிச்சை முறை மூலம் முள்ளந்தண்டு உபாதைகளை குணமாக்கும் சிகிச்சை முகாமே ஹட்டனில் நடத்தப்பட்டது.

முழுமையாக மனது மற்றும் உடற்பயிற்சி மூலம் முள்ளந்தண்டு உபாதைகளை குணமாக்கும் இந்த சிகிச்சை முகாமுக்கு ஆண், பெண் என அதிகளவானவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

கொழும்பில் அரச வைத்தியசாலைகளில் கடமைபுரியும் அரச வைத்தியர்களில் டோன் பயிற்சிசை முடித்தவர்கள் இந்த முகாமில் தமது சேவையை இலவசமாக வழங்கினர்.

மேலும் சிறுவர்களுக்கான சுகாதார அறிவூட்டல் நிகழ்ச்சிகளும் இந்த மருத்துவ முகாமில் இடம்பெற்றது.

இந்த மருத்துவ முகாம் மாதந்தம் ஹட்டனில் இலவசமாகவே நடத்தப்பட உள்ளதாக அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--