2025 ஜூலை 03, வியாழக்கிழமை

கழிவுத் தேயிலை கைப்பற்றல்

A.P.Mathan   / 2014 மார்ச் 28 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

அலவத்துகொடை ஒன்பதாம் கட்டை பிரதேசத்தில் களஞ்சியம் ஒன்றில் ஏற்றுமதிக்காக தயார் செய்யப்பட்டிருந்த 15,000 கிலோகிராம் கழிவுத் தேயிலையை பொலிஸார் இன்று (28) அதிகாலை கைப்பற்றி உள்ளனர்.

இன்று அதிகாலை அலவத்துகொiடை ஏ.9 வீதியில் ரோந்து சென்ற பொலிஸார், சந்தேகத்தின் பேரில் கைது செய்த மூன்று சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்திய பின், இக் கழிவு தேயிலை களஞ்சியம் பற்றிய தகவல் கிடைத்துள்ளது.

அங்கு சென்ற பொலிஸார், ஏற்றுமதிக்காக 521 பொதிகளில் தயார் செய்யப்பட்டிருந்த 15,000 கிலோகிராம் கழிவு தேயிலையை கைப்பற்றினர்.

அத்துடன் 10 சந்தேக நபர்கள், கனரக வாகனம் ஒன்று, தேயிலை தயார் படுத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள் இரண்டு உட்பட பல உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.

கைது செய்துள்ள சந்தேக நபர்கள், இன்று (28) கண்டி நீதவான் முன் ஆஜர் செய்ய உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .