2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

மது போதையில் மோட்டார் வாகனம் செலுத்தியவருக்கு பிடி விறாந்து

A.P.Mathan   / 2014 மார்ச் 29 , பி.ப. 01:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமச்சந்திரன்

மது அருந்தி விட்டு மோட்டார் வாகனத்தை செலுத்திய காசல்ரி தொழில் பயிற்சி கல்லூரியில்  கல்வி பயிலும் மாணவரை, ஹட்டன் மாவட்ட நீதிமன்ற நீதிபதி கைது செய்யுமாறு பெலிஸாருக்கு  உத்தரவு பிறப்பித்துள்ளார். 
 
நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட காசல்ரி சந்தியில் கடந்த 27ஆம் திகதி இரவு  வீதி போக்கு வரத்து பொலிஸாரினால் நடத்தப்பட்ட திடீர் சோதனையின் போது, மேற் குறிப்பிட்ட மாணவர் தலைக் கவசம் இன்றி மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளார். இந்நிலையில் அவரை, பொலிஸார் சோதனைக்குட்படுத்திய போதே மது அருந்தியிருந்தமை தெரியவந்துள்ளது.

குறித்த நபருக்கு எதிராக நோட்டன் பொலிஸார் வழக்கு பதிவு செய்ததுடன் நபரை ஹட்டன்  மாவட்ட நீதிமன்றத்தில் 28ஆம் திகதி ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

எனினும் குறித்த நபர், நீதிமன்றத்தில் ஆஜராகாத நிலையில், நீதிபதி பிடி விறாந்து பிறப்பித்துள்ளதாக  நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .