2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

ஐவர் பலி; சோகத்தில் மூழ்கியது முல்லேகம

Kanagaraj   / 2014 ஏப்ரல் 20 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மொஹொமட் ஆஸிக்


கதிர்காமத்தில் நேற்று(19) இடம் பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்ததை அடுத்து, அவர்கள் வசித்த கண்டி  அம்பதென்னை, முல்லேகம பிரதேசம் கடும் சோகத்தில் மூழ்கியுள்ளது.

சித்திரை புத்தாண்டு பிறப்பினையொட்டி கடந்த 15ஆம் திகதி கதிர்காமத்திற்கு சென்ற தந்தை, தாய், இரு மகள்கள், தாயின் தந்தை மற்றும் உறவினரின் குழந்தை ஒன்று உட்பட ஆறு பேர் இந்த விபத்தில் சிக்கியுள்ளனர்.

இவ் விபத்தின் போது ஐவர் உயிரிழந்துடன்  ஜனக சாமிகர தாபரே எனும் எட்டு வயது குழந்தை தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளது.

லலித் கிரிஷாந்த பண்டார(45) யொவ்வனிகா சிரோஷனி தாபரே(38) ஏஷனி பண்டார(11) சரத் தாபரே(70) இந்துனி ஆதித்யா பண்டார(14) ஆகிய 5 பேர் இந்த விபத்தில் பலியாகியுள்ளனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் இன்று(20) மாலை அவர்களது வீட்டுக்கு கொண்டுவரப்படவுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0

  • Rasheed M.A.A Sunday, 20 April 2014 12:49 PM

    மிகவும் சோகமான சம்பவம். ஆழ்ந்த அனுதாபங்கள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--