2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

தப்பியோடிய கைதிகள் நால்வரை தேடி வலைவிரிப்பு

Kanagaraj   / 2014 ஏப்ரல் 25 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

கண்டி பல்லேகல திறந்தவெளி சிறைச்சாலையிலிருந்து நேற்று வியாழக்கிழமை தப்பியோடிய கைதிகள் நால்வரையும் கைது செய்வதற்கான தேடுதல் நடவடிக்கைகளை சிறைச்சாலை அதிகாரிகளுடன் இணைந்து மேற்கொண்டுள்ளதாக கண்டி பொலிஸார் தெரிவித்தனர்.

பல்லேகலே திறந்த சிறைச்சாலையின் ஓரமாக ஓடும் மஹாவலி கங்கையில் பாய்ந்து அக்கரைக்கு நீந்தியே அக்கைதிகள் தப்பியோடி உள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிறைக் கைதிகளுக்கு பாதுகாப்பு வழங்கிய சிறைச் சாலை அதிகாரிகள் இருவரிடமும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .