Kogilavani / 2015 பெப்ரவரி 08 , மு.ப. 07:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரஞ்சித் ராஜபக்ஷ
லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரிய மட்டுக்கலை தோட்ட குடியிருப்பொன்றில் உள்ள (வீட்டிற்கு முன்) கிணறு ஒன்றில் இருந்து 4 வயதுடைய சிறுவன் சனிக்கிழமை(7) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஜெயகாந்த் சுதாகரன் என்ற சிறுவனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச்சிறுவன் கிணற்றில் மிதந்து கொண்டிருப்பதை கண்ட பிரதேச வாசி ஒருவர் உடனடியாக சிறுவனை தூக்கிக்கொண்டு லிந்துலை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளார்.
எனினும் சிறுவன் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
குறித்த சிறுவன் பெரிய மட்டுக்கலை தோட்டத்தில் உள்ள லிட்டில் ஸ்டார் என்ற பாலர் பாடசாலையில் கல்வி கற்றுள்ளார்.
சிறுவனின் தாய் வெளிநாட்டில் பணிபுரிவதாகவும் தந்தையின் அரவணைப்பிலேயே சிறுவன் இருந்ததாக தெரியவருகிறது.
சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
5 minute ago
9 minute ago
12 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
9 minute ago
12 minute ago