2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

அக்குறணை நகர மக்கள் அவதி

Kogilavani   / 2015 பெப்ரவரி 10 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்


அக்குறணை பிரதேச சபை பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் குப்பைகளை அகற்றுவதை பிரதேச சபை நிறுத்தியதன் காரணமாக அக்குறணை நகரம் மற்றும் சூழ உள்ள மக்கள் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளனர்.


இப்பகுதியில், கடந்த சில நாட்களாக குப்பைகள் அகற்றுவது தடைப்பட்டுள்ளது. இதனால் தாம் பாரிய அசௌகரியங்களுக்கு உள்ளாகி உள்ளதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.


அக்குறணை நகரம், ஏ-9 பிரதான வீதி மற்றும் முக்கிய பாதைகள் ஓரங்கள் குப்பைகளால் நிறைந்து உள்ளதை காணக்கூடியதாக உள்ளது.


இவ்விடயம் தொடர்பாக, அக்குறணை பிரதேச சபையின் தலைவர் எ.எம்.எம்.சிம்சானிடம்; தொடர்புகொண்டு கேட்டபோது,
அக்குறணை பிரதேசசபை குப்பைகளை கொட்டுவதற்காக பயன்படுத்தும் யாலுகஹவெல பிரதேசத்தில் அமைந்துள்ள இடம் அண்மையில் பெய்த கடும் மழைக் காரணமாக மண்சரிவுக்கு உள்ளாகியுள்ளது.


இதன் காரணமாக இப்பகுதி மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.


மத்திய சுற்றாடல் அதிகாரசபை நடத்திய விசாரணையின் பின், அப் பகுதியில் குப்பைகளை கொட்டுவதை நிறுத்துமாறு பணித்துள்ளோம்.


இதுதொடர்பாக மக்களை அறிவுறுத்தி உள்ளோம். குப்பைகளை தரம் பிறித்து தரும் பட்சத்தில் அவற்றை பயன்படுத்;தி கொம்போஸ்ட் தயாரிக்க முடியும்.


இதன்பின் குப்பைகளை உக்கும் பொருட்கள், உக்காத பொருட்கள் என தரம் பிரித்து குப்பைகளை சேகரிக்கும் லொரிக்கு ஒப்படைக்கும் குப்பைகளை மட்டுமே பிரதேச சபைக்கு அகற்ற முடியும் என்றும் பாதைகளில் குப்பைகளை கொட்டுவதை தவிர்த்துக் கொள்ளுமாரும் அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X