2021 மார்ச் 04, வியாழக்கிழமை

ஆசிரியர் உதவியாளர்கள் விவகாரம் தொடர்பில் ஆணைக்குழுவில் முறைப்பாடு

Sudharshini   / 2015 ஜூலை 28 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெருந்தோட்ட பாடசாலைகளுக்கு ஆசிரியர் உதவியாளர்களாக நியமனம் பெற்றவர்களும் மற்றும் பெற இருப்பவர்களும் இலங்கை ஆசிரியர் சேவை வகுப்பு – 03 – தரம் IIற்கு தகுதியானவர்கள் என்பதனால் அவர்களை ஆசிரிய உதவியாளர்காக நிதியமித்த திகதியில் இருந்து ஆசிரியர் சேவைக்குள் இணைத்து கொள்வதற்கு நடவடிக்கைகளை எடுக்க உரிய அதிகாரிகளை பணிக்கும்படி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் மக்கள் ஆசிரியர் சங்கம் முறைப்பாடு செய்துள்ளது.

குறித்த முறைப்பாட்டை 23.07.2015ஆம் திகதி மக்கள் ஆசிரியர் சங்கத்தின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் இரா. நெல்சன் மோகன்ராஜினால் பொதுநல அக்கறை விடயமாக குறிப்பிட்டு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் முறைப்பாட்டு  இலக்கமாக HRC/2638/15 வழங்கப்பட்டுள்ளது.  

குறித்த முறைப்பாட்டில் ஆசிரியர் சேவையின் பிரமாணக் குறிப்பின்படி ஆசிரியர் சேவை வகுப்பு 03- தரம் IIற்கான கல்வி தகைமையையும் ஏனைய தகைமைகளையும் கொண்டவர்கள் ஆசிரியர் சேவை வகுப்பு 03 தரம் IIற்கு ஆட்சேர்ப்பிற்கு பின்பற்றவேண்டிய நடவடிக்கை முறைகளை பின்பற்றி, ஆசிரியர் சேவை பிரமாணக் குறிப்பில் இல்லாத நியாயமற்ற, சட்டரீதியற்ற, பொது நியமங்களை மீறிய நிபந்தனைகளுக்கு உட்படுத்தப்பட்டு நிரந்தரமற்ற 'ஆசிரிய உதவியாளர்' என்ற பெயரில் ஆட்சேர்த்தமையினூடாக அரசியலமைப்பின் அடிப்படை உரிமை அத்தியாயத்தில் 12(1), 14(1) உறுப்புரைகளின் கீழ் பிரஜைகளின் அடிப்படை உரிமையை மீறியுள்ளமை முறைப்பாட்டில் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .