2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

ஐ.ம.சு.கூ.வின் அலுவலகங்கள் மீதான தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Sudharshini   / 2015 ஓகஸ்ட் 05 , பி.ப. 07:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா

பதுளையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிடும் இரு வேட்பாளர்களின் அலுவலகங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டித்து, அப்பகுதி மக்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  

தியத்தலாவையில் அமைந்துள்ள அலுவலகங்கள் மீது இனந்தெரியாத நபர்கள் செவ்வாய்க்கிழமை(4) இரவு தாக்குதலை மேற்கொண்டு தப்பிச்சென்றுள்ளனர்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் இதுவரை கைதுசெய்யப்படவில்லை என்பதுடன் பொலிஸார் இதுதொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தாக்குதலுடன் தொடர்புடையவர்களை உடனடியாக கைதுசெய்யுமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .