2021 மார்ச் 03, புதன்கிழமை

வீட்டை பதம்பார்த்த கற்பாறை

Sudharshini   / 2015 ஓகஸ்ட் 05 , பி.ப. 02:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ

நோர்வூட், சின்ன தரவளையிலுள்ள வீடொன்றின் மீது, இன்று புதன்கிழமை (05) அதிகாலை, கற்பாறை சரிந்து விழுந்ததில் வீடொன்று பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது வீட்டினுள் இரு பெண்கள்,  இரு சிறுவர்கள் மற்றும் குழந்தையொன்று உட்பட ஐவர் இருந்துள்ளனர். எனினும்  யாருக்கும்  எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும்  அனைவரும் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளதாகவும்  தெரியவருகிறது.

மேற்படி ஐவரும் தற்போது உறவினர்களது வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மலையகத்தில் கடந்த சில நாட்களாக நீடித்து வரும் சீரற்ற காலநிலையால்; மக்கள் தமது இயல்பு வாழ்க்கையை இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .