2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

'சுயதொழில்களை ஏற்படுத்தி கொடுப்பதே எனது இலக்கு'

Kogilavani   / 2015 ஓகஸ்ட் 06 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

'பதுளை மாவட்ட தமிழ் மக்கள், ஒவ்வொருவரும் சொந்த காலில் நிற்கவேண்டுமேயானால் தற்போது அவர்கள் முகங்கொடுக்கும் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு தானாகவே தீர்வு கிடைக்க வேண்டும். அதற்கான திட்டங்களுடனேயே நான் மக்களிடம் வாக்கு கேட்கின்றேன்' என பதுளை மாவட்டத்தில்  சேவல் சின்னத்தில் இலக்கம் 6 இல் போட்டியிடும் சிரேஷ்ட ஊடகவியலாளரான பி.தேவராஜா தெரிவித்தார்.

'பதுளை மாவட்ட தமிழ் மக்களின் தேவையை அறிந்து, அவர்கள் ஒவ்வொருவரும் தமது சொந்தக்காலில் நிற்பதற்கு ஏதுவாக சுயதொழில்களை ஏற்படுத்தி கொடுப்பதே தனது இலக்கு என்றும் அவர் தெரிவித்தார்.

பதுளை, கீனாக்கலை, கீனாச்சேனை ஆகிய தோட்டங்களில் நேற்று (6) இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலே அவர் இதனை தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் தெரிவித்த அவர்,

'நான் எவ்வித சுயலாபத்துக்காகவுமன்றி மக்கள் நல சேவைக்காகவே பதுளை மாவட்டத்தில் தேர்தலில் களமிறங்கியுள்ளேன். எனது இலக்கு மக்களை சொந்த காலில் நிற்க வைப்பதேயாகும். சுய தொழில்களை பெற்றுக்கொடுத்தல், வீட்டுக்கு ஒரு பட்டதாரி என்ற இலக்கை நோக்கி பதுளை மாவட்ட தமிழ் மக்களை பயணிக்க செய்தல்;, இடைவிலகும் மாணவர்களுக்கு ஆலோசனைகளையும் பயிற்சிகளையும் வழங்கி தொழில்களை பெற்றுகொடுத்தல் மற்றும் மதுபானம், போதை பொருள் பாவனைக்கு எதிரான தேசிய திட்டங்களுடன் இணைந்து செயற்படுதல் போன்ற பல விடயங்களை உள்ளடக்கியதே எனது தேர்தல் விஞ்ஞாபனம்' என்றும் அவர் கூறினார்.

'பதுளை மாவட்டத்தில் அரிசியல் தொழிற்சங்க பேதங்களுக்கு அப்பால் சேவையாற்றி புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்குவதும்' எனது இலக்கு என அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .