2021 மார்ச் 08, திங்கட்கிழமை

சிறுத்தை தாக்கி பெண் தொழிலாளி படுகாயம்

Gavitha   / 2015 ஓகஸ்ட் 21 , மு.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சதிஸ்

பொகவந்தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொகவந்தலாவ கியூ தோட்டத்தில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த பெண் தொழிலாளி ஒருவரை, சிறுத்தை  தாக்கியதில் குறித்த பெண் படுகாயமடைந்த நிலையில் பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம்  இன்று வெள்ளிக்கிழமை (21) காலை இடம்பெற்றுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் வலது கையிலும் உடம்பின் பின்புறத்தில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவரை நாவலப்பிடடிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொகவந்தலாவ வைத்தியாசாலைக்கு பொறுப்பான வைத்திய அதிகாரி ஏ.எஸ்.கே. ஜயசூரிய தெரிவித்தார்.

மேலும், பெண்ணை தாக்கிய சிறுத்தை தொடர்பாக வனவிலங்கு காரியாலயத்துக்கு அறிவித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .