Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Sudharshini / 2015 ஓகஸ்ட் 23 , பி.ப. 01:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மொஹொமட் ஆஸிக்
பஸ்ஸில் பயணித்த பெண்ணொருவரின் பயணப்பையிலிருந்து ஒரு இலட்சம் ரூபாயை திருடியதாக கூறப்படும் பெண்கள் மூவரை, எதிர்வரும் 4ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கண்டி நீதவான் ஏ.எம். வசந்தகுமார உத்தரவிட்டார்.
புத்தளத்தைச் சேர்ந்த பெண்களே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கண்டி பெரஹெராவில் கலந்துகொள்ள வருகை தரும் பக்தர்களது பணப்பைகளை திருடும் முயற்சியில் இப்பெண்கள் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்நிலையிலேயே, சனிக்கிழமை மாலை சொகுசு பஸ் ஒன்றில் ஏறிய இவர்கள், அதில் பயணித்த பெண் ஒருவரிடமிருந்து ஒரு இலட்சம் ரூபாய் பணத்தை சூரையாடியுள்ளனர்.
தனது பணப்பையிலிருந்த பணம் காணாமல் போயுள்ளதை அறிந்த அந்தப்பெண், பஸ்ஸை பொலிஸ் நிலையத்தை நோக்கி திருப்புமாறு சாரதியிடம் கூறியுள்ளார். இதனையடுத்து சாரதியும் பஸ்ஸை பொலிஸ் நிலையத்தை நோக்கி செலுத்தியுள்ளார்.
பொலிஸ் நிலையத்தில் வைத்து, பஸ்ஸில் பயணித்த பயணிகளை பொலிஸார் சோதனை செய்துள்ளனர். இதன்போது, மேற்படி மூன்று பெண்களும் பணத்தை கீழே போட்டுவிட்டு ஏனைய பயணிகளுடன் சென்று நின்றுள்ளனர். கீழே கிடந்த பணத்தை மீட்டு குறித்த பெண்ணிடம் பொலிஸார் ஒப்படைத்துள்ளனர்.
விசாரணையின்போது இப்பெண்கள் அடையாள அட்டையை வழங்க மறுத்துள்ளதுடன் முறையாக பதிலளிக்க தவறியுள்ளனர்.
இவர்கள் புத்தளத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை விசாரணைக்கூடாக அறிந்துகொண்ட பொலிஸார் புத்தளம் பொலிஸ் நிலையத்துக்கு தொடர்பை ஏற்படுத்தி பெண்கள் குறித்து வினவியுள்ளனர். இப்பெண்கள் தொடர்ச்சியாக திருட்டு நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளமை பின்னர் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து மூவரையும் கைதுசெய்து கண்டி நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோதே நீதவான் மேற்படி உத்தரவைப் பிறப்பித்தார்.
18 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago