2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

விபத்தில் சிக்கிய இருவரும் பரீட்சைக்கு தோற்றினர்

Gavitha   / 2015 ஓகஸ்ட் 23 , பி.ப. 02:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ

நோர்வூட் மற்றும் கொஸ்கம பகுதிகளில் இடம்பெற்ற வெவ்வேறான இரண்டு விபத்துக்களில் சிக்கிய மாணவர்கள் இருவரும் இன்று  நடைபெற்ற ஐந்தாம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றினர்.

நோர்வூட், எல்படையை சேர்ந்த, தரம்- 5 இல் கல்வி கற்றுவரும்  ரஞ்சன் ரஜீஸ் என்ற மாணவன், கடந்த வியாழக்கிழமை (20), விறகு வெட்டச் சென்ற போது எதிர்பாராத விதமாக இடதுகையை கத்தியால் வெட்டிகொண்டார்.

கைதொங்கிய நிலையில் டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கண்டி – பேராதனை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட இச்சிறுவனுக்கு, சத்திரசிகிச்சையில் இடதுகை பொருத்தப்பட்டது.

இந்நிலையில் மிகுந்த சிரமத்தின் மத்தியில் மேற்படி மாணவன், நேற்று ஞாயிற்றுக்கிழமை நடந்த புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றியுள்ளார்.

இதேவேளை, புலமைப்பரிசில் பரீட்சைக்கு தனது தாய், தந்தையுடன் சென்றுக்கொண்டிருந்த கொஸ்கமையைச்சேர்ந்த கே.டி.எம். நிபுணா என்ற மாணவி, வீதியை கடக்க முற்பட்டபோது முச்சக்கரவண்டியில் மோதுண்டு விபத்துக்குள்ளானார்.

இன்றுக்காலை 8.50 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் சிறு காயங்களுக்கு உள்ளான அந்த மாணவி, அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் அவிசாவளை ஜனாதிபதி வித்தியாலயத்தில் தோற்றினார்.

சம்பவத்தையடுத்து முச்சக்கரவண்டியின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .