2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

டிக்கோயாவில் பஸ் விபத்து: 26 பேர் காயம்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 15 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹட்டன்- டிக்கோயா பிரதான வீதியில் இன்று மாலை செவ்வாய்கிழமை(15) இடம்பெற்ற பஸ் விபத்தில்  26பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களில் மூவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

காயமடைந்தவர்களில் 23 பேர் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மூவர் நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்தானது, ஹோல்டனிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த தனியார் பஸ்வண்டியும், ஹட்டனிலிருந்து மஸ்கெலியா நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பஸ் வண்டியும் வனராஜா பகுதியில் நேருக்கு நேர் மோதியதிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--