Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
A.P.Mathan / 2010 நவம்பர் 04 , பி.ப. 04:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
(மொஹொமட் ஆஸிக்)
கண்டி பிரதேசத்தில் பெருமளவில் கஞ்சா போதை பொருளை விநியோகம் செய்த பிரதான பெண்ணொருவரை இன்று கட்டுகஸ்தோட்டை பொலிஸார் கைது செய்தனர்.
இரண்டு நாட்களுக்கு முன்னர் கைதுசெய்யப்பட்ட பெண்கள் இருவரிடம் நடத்திய விசாரணையின் பேரிலேயே பிரதான சந்தேக நபர் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட இம்மூன்று சகோதரிகளிடமிருந்து சுமார் 15 கிலோகிராம் கஞ்சாவும் 33,150 ரூபாய் பணமும் கைப் பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கண்டி பேராதனை ஹிந்தகல பிரதேசத்தில் நீண்ட காலமாக கஞ்சா விநியோகிப்பதில் ஈடுபட்டதாக கூறப்படும் இம்மூன்று சகோதரிகளையும் பெரும் சிரமத்துக்கு மத்தியிலேயே கைது செய்ததாக பொலிஸார் கூறுகின்றனர்.
கைது செய்யப்பட்ட மூன்று சகோதரிகளில் இரண்டு பேரை கண்டி பிரதான நீதவான் லலித் ஏக்கநாயக்க முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் மற்றுமொரு சகோதரி தடுப்பு ஆணையுடன் பொலிஸில் தடுத்து வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் நடத்தப்படுகின்றன.
கண்டி மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் உபாலி ஜயசிங்க மற்றும் கட்டுகஸ்தோட்டை பொலிஸின் பொறுப்பதிகாரி எஸ்.பீ.தியகெலினாவல ஆகியோரின் ஆலோசனைக்கமைய மேலதிக விசாரணைகள் நடைபெறுகின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Jul 2025
14 Jul 2025
14 Jul 2025