2021 ஜனவரி 25, திங்கட்கிழமை

ஹப்புத்தளையில் மினி சூறாவளி: 300 வீடுகள் சேதம்

Kanagaraj   / 2013 ஜனவரி 05 , மு.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹப்புத்தளை மற்றும் ஹல்துமுல்லை ஆகிய பிரதேசங்களில் வீசிய மினி சூறாவளி மற்றும் மழையினால் சுமார் 300 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஹப்புத்தளை பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது.

ஹப்புத்தளை வைத்தியசாலை,பொலிஸ் நிலையம் ஆகியவற்றுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் மரங்கள் முறிந்து விழுந்துள்ளமையினால் அந்த பிரதேசத்தில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

ஹல்துமுல்லை,லேமஸ்தோட்டை மற்றும் கித்துல்ஆராவ ஆகிய இடங்களிலேயே கூடுதலான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் மினி சூறாவளியின் வேகம் தற்போது ஓரளவிற்கு குறைந்து வருவதாகவும் பிரதேச செயலாளர் தெரிவித்தார்.

அந்த பிரதேசங்களில் நேற்றிரவு முதல் கடும்மழை பெய்துவருவதுடன் இன்று சனிக்கிழமை அதிகாலை வேளையிலேயே மினி சூறாவளி வீசியுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .