2020 செப்டெம்பர் 18, வெள்ளிக்கிழமை

நல்லதண்ணி வீதியோரத்தில் 5 மாத சிசுவின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 24 , மு.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

மஸ்கெலியா நல்லதண்ணி  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நல்லத்தண்ணி பிரதான பாதையோரத்திலிருந்து ஐந்து மாத சிசுவொன்றின் சடலம் நேற்று புதன்கிழமை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்தே, குறித்த சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனைக்காகவும் சட்டவைத்திய அதிகாரியின் அறிக்கைக்காகவும் மரபணு பரிசோதனைக்காகவும் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் சடலம் வைக்கப்பட்டுள்ளதாக  நல்லதண்ணி பொலிஸார் தெரிவித்தனர். சிவனொளிபாதமலைக்கு யாத்திரைக்காக சென்ற பெண்ணொருவருக்கு ஏற்பட்ட கருச்சிதைவு அல்லது குறைப்பிரசவமாக இச்சிசுவின் சடலம் இருக்கலாமென்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். 

இவ்விடயம் தொடர்பாக நல்லத்தண்ணி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--