Editorial / 2019 நவம்பர் 11 , மு.ப. 09:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
தோட்டத் தொழிலாளர்களுக்கான கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொடுப்பது, இன்று பேசுபொருளாக மட்டுமே உள்ளதாகத் தெரிவித்த நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர் வேலு யோகராஜ், இதற்குத் தமிழ் முற்போக்குக் கூட்டணியினரே காரணம் என்றும் தெரிவித்தார்.
ஒவ்வொறு மாத சம்பளத் தினத்தன்று, 50 ரூபாய் தொடர்பில், அறிக்கை விடுதவதை மட்டுமே கூட்டணி செய்துவருவதாகவும் ஆனால் அந்தக் கொடுப்பனவு, தொழிலாளர்களின் கரங்களில் சேர, எவ்வித நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கூறியுள்ள அவர், தோட்டத் தொழிலாளர்களுக்கு 50 ரூபாய் கொடுப்பனவைப் பெற்றுக்கொடுப்பதற்கு, தொழிற்சங்கங்களின் ஒத்துழைப்பு தேவை என்று, பெருந்தோட்ட அபிவிருத்தி அமைச்சர் கோரியிருந்தால், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அதற்கான ஆதரவை வழங்கும் என்றும் தெரிவித்தார்.
அதேநேரத்தில், இந்தத் தொகையை நிலுவைத் தொகையுடன் வழங்கும் பட்சத்தில் தொழிலாளர்கள் சந்தோசப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
20 minute ago
1 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
1 hours ago
5 hours ago
5 hours ago