2020 ஓகஸ்ட் 14, வெள்ளிக்கிழமை

’அபிவிருத்தி நிதி திறைசேரிக்குச் சென்றமையால் அபிவிருத்திகள் முடக்கம்’

எம். செல்வராஜா   / 2019 டிசெம்பர் 08 , பி.ப. 01:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேர்தல், ஆட்சி மாற்றம், வருட இறுதி போன்ற பல்வேறு காரணங்களால், பிரதேச அபிவிருத்திக்கென்று ஒதுக்கீடு செய்யப்பட்ட பன்முகப்படுத்தப்பட்ட நிதி, மீண்டும் திறைசேரிக்கு சென்றமையால், பிரதேச அபிவிருத்தி ஸ்தம்பிதம் அடைந்துள்ளது என, பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார், ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷவுக்கு, அவசரக் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

தொலைநகல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ள குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தான் பிரதிநிதித்துவம் செய்யும் பதுளை மாவட்டத்தில், தனது சிபாரிசுக்கிணங்க ஒதுக்கப்பட்ட சுமார் 60 மில்லியன் ரூபாய்க்கு மேலான நிதி, திறைசேகரியால் மீளப் பெறப்பட்டுள்ளது என்றும் தனது பிரதேசத்துக்கென ஒதுக்கப்பட்ட நிதியில், பல்வேறு அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டு மக்கள் மயப்படுத்தப்பட்ட போதிலும், மிகுதியாக உள்ள அபிவிருத்தித்திட்டங்கள் முடியும் தருவாயில் இருக்கும் போதே, இந்த நிதி மீளப் பெறப்பட்டுள்ளதாக அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தல் காலத்தின் போது, இந்த வேலைத்திட்டங்கள் இடைநிறுத்தப்பட்டன என்றும் இவ்வேலைத்திட்டங்கள் தேர்தல் முடிவடைந்தவுடன் தொடரப்படுமென மாவட்ட, பிரதேச செயலகங்களால் தனக்கு அறிவிக்கப்பட்டது என்றும் எனினும், தேர்தல் முடிவுக்கு பின்னர், அசமந்தப் போக்கே காணப்பட்டது என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்த வேலைத்திட்டங்கள் தாமதமடைவதற்கு, மக்களோ நாடாளுமன்ற உறுப்பினர்ளோ காரணம் அல்ல என்றும் அதற்கு சம்பந்தப்பட்ட அரச உத்தியோகத்தர்களே காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அபிவிருத்தித் திட்டங்கள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளமையால், நாட்டின் புதிய ஜனாதிபதியாகப் பொறுப்பேற்று்ளள தங்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் என்றும் எனவே, ஒதுக்கப்பட்ட நிதியை மீளப் பெற்று, திறைசேரிக்கு அனுப்பாமல், குறித்த வேலைத்திட்டங்களுக்கே ஒதுக்கித்தர உத்தரவிடுமாறு, அக்கடித்தில் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--