2020 ஓகஸ்ட் 14, வெள்ளிக்கிழமை

இரத்தினபுரி நகரம் அலங்கரிப்பு

Editorial   / 2019 டிசெம்பர் 04 , பி.ப. 02:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம்.பாயிஸ்

இரத்தினபுரி மாநகரசபை பிரதேசத்தில், கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தின்போது, நகரின் சுவர்களில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் அனைத்தும் முற்றாக அகற்றப்பட்டு, அவ்விடங்களில் சித்திரங்கள் வரையும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இரத்தினபுரி மாநகர சபை, இரத்தினபுரி பொலிஸ் நிலையம் ஆகியவையே, இதை நடைமுறைப்படுத்தியுள்ளன.

இதன் முதற்கட்டமாக, நகரின் எல்லைக்குட்பட்ட சகல பிரதேசங்களிலும் அரசியல் கட்சிகளால் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர்கள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளன. அவ்விடங்களில், சித்திரங்கள் வரைவதன் மூலம், நகரை அலங்கரிக்க முடியும் என்பதோட. இனிவரும் காலங்களில் அதன்மேல் சுவரொட்டிகள் ஒட்டப்படாது என்றும் இரத்தினபுரி விசேட பொலிஸ் அத்தியட்சகர் சுதம் மாரசிங்க தெரிவித்தார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--