Editorial / 2019 ஒக்டோபர் 11 , மு.ப. 08:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் செயற்பாட்டில் அதிருப்தியுற்றே, தொழிலாளர் தேசிய சங்கத்தில் இணைந்துகொண்டதாக, இ.தொ.காவிலிருந்து விலகிய கருப்பு என்றழைக்கப்படும் இராமையா மலர்வாசகம் விளக்கமளித்தார்.
காலத்துக்குக் காலம் காங்கிரஸில் ஓர் அடிமையாகவே தான் இருந்ததாகவும் காங்கிரஸ் எதிர்கொண்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தானும் முகங்கொடுத்ததாகவும் இவ்வாறான காரணங்களால் ஏற்பட்ட அதிருப்திக் காரணமாகவே தான் இ.தொ.காவிலிருந்து விலகியதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
நான்கு தடவைகள் பிரதேசசபை உறுப்பினராக இருந்த தான், எட்டு வருடங்களாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பத்தனை பிரதேச அமைப்பாளராகச் செயற்பட்டு வந்ததாகவும் இருந்தபோதும் தனது அரசியல் செயற்பாட்டுக்கு, அந்த அமைப்பினூடாகத் தடைகளும் நிராகரிப்புகளுமே தொடர்ச்சியாக இருந்து வந்ததுடன் பெயரளவிலே அமைப்பாளராகச் செயற்பட்டதாகவும் தெரிவித்தார்.
இவ்வாறான நிலையில், ஐந்தாண்டு காலப்பகுதியில் மலையகத்தில் பல்வேறு அபிவிருத்திப் புரட்சியை செய்துவரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் அமைச்சருமான பழனி திகாம்பரத்தின் கரங்களைப் பலப்படுத்தும் வகையிலும் பிரதேச அபிவிருத்தியை நோக்காகக் கொண்டும், தொழிலாளர் தேசிய சங்கத்தோடு இணைந்து கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இன்னும் பலர் இ.தொ.கா அமைப்பின் தலைமையின் தன்னிச்சையான செயற்பாட்டில் அதிருப்தியுற்றுள்ளனர் என்றும் அவர்கள் அனைவரும் விரைவில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸிலிருந்து வெளியேறி தொழிலாளர் தேசிய சங்கத்தில் இணையவுள்ளனர் என்றும் தெரிவித்தார்.
1 hours ago
7 hours ago
29 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
7 hours ago
29 Jan 2026