2020 ஜூன் 04, வியாழக்கிழமை

‘இ.தொ.காவை அசைக்க முடியாது’

Editorial   / 2019 டிசெம்பர் 02 , பி.ப. 08:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.கேதீஸ் 

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்பது ஆலமரம் என்று கூறியுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிதி செயலாளரும் மத்திய மாகாண முன்னாள் கல்வியமைச்சருமான மருதபாண்டி ராமேஸ்வரன், அதை எவராலும் அசைக்கமுடியாது என்றும் கூறினார்.

இது தொடர்பாக ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், மேலும் தெரிவித்ததாவது,  

இ.தொ.கா, பலமானதாகவே உள்ளது என்பதை, ஜனாதிபதித் தேர்தலின்போது நிரூபித்ததாகவும் கடந்தமுறையை விட, இம்முறை வாக்குவங்கி அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறினார்.  

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், அரசியல் சாணக்கியத்துடனும் தூரநோக்குடனும் சிந்தித்து கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கி, அவரது வெற்றியின் பங்காளியாக உள்ளது என்றும் தேசிய தலைவரான ஆறுமுகன் தொண்டமான், எல்லைகளைத் தாண்டி எல்லா பகுதிகளுக்கும் சேவையாற்றக்கூடியவர் என்றும் அவருக்கு, அனைத்து பகுதிகளிலும் ஆதரவாளர்கள் உள்ளனர் என்றும் கூறினார்.  

தலைவரின் அமைச்சினூடாக, மலையகத்தின் அபிவிருத்திக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், காத்திரமான பங்களிப்பை வழங்கும் என்றும் அத்துடன், உரிய வகையில் தனிவீட்டு திட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். 

7 பேர்சஸ் என்ற வரையறையை ஏற்க முடியாது என்றும் அதற்கு மேல் வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்த அவர், ஆனால், மாடி லயன் என கூறப்படுவது போலியானது என்றும் கூறினார்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X