2021 ஏப்ரல் 22, வியாழக்கிழமை

கேபில்கள் சரிந்ததால் இருவர் காயம்

Kogilavani   / 2021 ஏப்ரல் 07 , பி.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.கிருஸ்ணா

ஹட்டன்- கொழும்பு பிரதான வீதி, குடாகம பகுதியில், தொலைபேசி இணைப்புக்கான கேபில்களை (கம்பி)  ஏற்றிச்சென்ற கனரக லொறியிலிருந்து  ஒரு தொகுதி கேபில்கள் சரிந்து பிரதான வீதியில் விழுந்ததால், பாதசாரிகள் இருவர் சிறு காயமடைந்துள்ளனர்.

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குடாகம பகுதியிலேயே, இன்று (7) மதியம் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அதிக வேகமாக சென்ற குறித்த கனரக லொறி, வளைவொன்றில் செல்கையிலேயே, கேபில்கள் வீதியில் விழுந்துள்ளன.

இதன்போது பாதசாரதிகள் இருவர் சிறு காயமுற்றதுடன் போக்குவரத்தும் சில மணிநேரம் தடைப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X