Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
டி. ஷங்கீதன் / 2020 ஜனவரி 09 , பி.ப. 04:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுவரெலியா சித்தர் ஸ்ரீமுருகேசு மஹரிஷி அறநெறி பாடசாலையின் 10ஆவது ஆண்டை நிறைவு செய்யும் முகமாக, “காயத்ரீயம் கலை விழா”, நுவரெலியா புதிய நகர மண்டபத்தில், நாளை மறுதினம் (11), காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.
ஸ்ரீ இலங்காதீஸ்வரர் ஆலய காயத்ரி பீட அறங்காவலரும் அறநெறி பாடசலையின் தலைவருமாகிய ஸ்ரீ சக்திவேல் சந்திரமோகன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வின் பிரதம அதிதியாக, சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவருமான ஆறுமுகன் தொண்டமானும் கௌரவ அதிதியாக நுவரெலியா மாநர மேயர் சந்தனலால் கருணாரட்ணவும் கலந்துகொள்ளவுள்ளனர்.
இவ்விழாவில், மாணவர்களின் கலை கலாசார நடன நிகழ்வுகள் நடைபெறவுள்ளதோடு, பங்குபற்றும் மாணவர்களுக்கு பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்படவுள்ளன.
கடந்த 2009ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 8ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த அறநெறி பாடசாலையில், இதுவரைக்கும் 1,400 மாணவர்கள் கல்வி கற்று வெளியேறியுள்ளனர்.
இந்நிலையில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும், சுமார் 300 மாணவர்கள் அறநெறிக் கற்கை நெறியைப் பெற்றுக்கொள்கின்றனர்.
4 hours ago
7 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago
9 hours ago
9 hours ago