Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 டிசெம்பர் 10 , பி.ப. 01:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.ஏ.எம்.பாயிஸ்
இலங்கை போக்குவரத்துச் சபையின் சப்ரகமுவ மாகாண முகாமையாளரின் உத்தியோகப்பூர்வ வாகனம், ஒரு சிலரால் அபகரிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடமை நிமித்தம், கொடக்கவெல, பலாங்கொடை பிரதேச காரியாலங்களுக்கு, கடந்த 26ஆம் திகதி சென்றிருந்த போதே, இந்தச் சம்பவம் இடம்பெற்றிருந்ததாக, முகாமையாளர் ஆர்.யூ.எம்.ராஜ கருணா, தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த அவர் கேகாலை, மாவனல்லை, தெரணியகல, இரத்தினபுரி, பலாங்கொடை, கலவான, எம்பிலிப்பிட்டிய, கொடக்கவெல, வரகாபொல, கஹவத்த ஆகிய போக்குவரத்து டிப்போக்களின் மேற்பார்வை கடமைகளை செய்து வந்ததாகவும் ஆட்சி மாற்றத்தின் பின்னர், தொழிற்சங்க நடவடிக்கைகளோடு தொடர்புடையவர்களே, இந்தச் செயற்பாட்டை செய்திருப்பர் என்றும் அவர் கூறினார்.
எனவே, மேலதிகாரிகள் இந்த விடயத்தைக் கவனத்தில் கொண்டு, தன்னுடைய உத்தியோகப்பூர்வ வாகனத்தை கையளித்து, கடமைகளை முன்னெடுப்பதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
2 hours ago
18 Oct 2025
18 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
18 Oct 2025
18 Oct 2025