Editorial / 2017 செப்டெம்பர் 26 , பி.ப. 04:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
திருமண வைபவமொன்றில், மணப்பெண் அணிந்திருந்த சுமார் 3.2 கிலோமீற்றர் நீளமான சேலையை ஏந்துவதற்காக, தங்களுடைய விருப்பத்தின் பேரிலேயே, அலவத்துகொடை சரத் ஏக்கநாயக்க ஆரம்ப பாடசாலையின் மாணவ, மாணவிகளைப் பயன்படுத்தியதாக, அப்பாடசாலை மாணவர்களின் பெற்றோர் தெரிவித்தனர்.
இது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக, மத்திய மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள், பாடசாலைக்கு விஜயம் செய்திருந்தனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், மாணவர்களின் பெற்றோர் நேற்று (25) மாலை, பாடசாலையை சுற்றிவளைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போதே, அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.
கின்னஸ் சாதனையை நிலைநாட்ட வந்தவர், குறித்த பாடசாலையின் பழைய மாணவியே என்றும் பழைய மாணவி சாதனையொன்றை நிலைநாட்ட முயற்சிக்கும் போது, அதற்கு உதவி செய்வது தங்களுடைய கடமையே என்றும், இதன்போது பெற்றோர் கூறியுள்ளனர்.
அதனாலேயே, தங்களுடைய பிள்ளைகளை, இதில் சம்பந்தப்படுத்துமாறு, அதிபரிடம் தாம் கோரிக்கை விடுத்ததாகவும் இதில், பாடசாலை அதிபரிடம் எந்தவொரு தவறும் கிடையாது என்றும், பெற்றோர் கூறியுள்ளனர். பாடசாலையை சுற்றிவளைத்த பெற்றோர், அங்கு ஆர்ப்பாட்டமொன்றையும் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
33 minute ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
6 hours ago
6 hours ago