2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

சௌமியமூர்த்தி தொண்டமானின் 102ஆவது ஜனன தின கொண்டாட்டங்கள்

Sudharshini   / 2015 ஓகஸ்ட் 25 , பி.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபகரும் மலையக வரலாற்றில் தனக்கென ஓர் இடத்தை வகிக்கும் மாபெரும் தலைவருமான அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 102ஆவது ஜனன தினத்தையொட்டி எதிர்வரும் 30ஆம் திகதி, மலையகத்திலும்; கொழும்பிலும் விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதற்கமைவாக கொழும்பு பழைய நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் அமைந்துள்ள அவரது உருவச்சிலைக்கு 30ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணிக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்படவுள்ளதாக இ.தொ.கா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

இந்நிகழ்வில், இ.தொ.கா.வின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான், இ.தொ.கா.வின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான முத்து சிவலிங்கம் உட்பட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதனையடுத்து, கொழும்பு சௌமிய பவனில் அமைந்துள்ள ஸ்ரீ விநாயகர் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெறவுள்ளன. இதேவேளை, மலையகத்திலுள்ள ஆலயங்களிலும் இ.தொ.கா அலுவலகங்களிலும் விசேட வழிபாடுகள் நடைபெறவுள்ளன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .