Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஜனவரி 08 , பி.ப. 12:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீ சண்முகநாதன்
தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ப.திகாம்பரத்தின் பிறந்த தினத்தை முன்னிட்டு , பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள், நாளை மறுதினம் (10) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளன.
முன்னாள் அமைச்சர் திகாம்பரத்தின் நிதி ஒதுக்கீட்டில் பூர்த்தி செய்யப்பட்டுள்ள வேலைத் திட்டங்களே, அன்றைய தினத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளன.
மேலும் தலவாக்கலை நகரசபை மைதானத்தில், இரத்ததான நிகழ்வு நடைபெறவுள்ளதுடன், 1,500பேருக்கு இலவச மூக்குக் கண்ணாடிகள் வழங்கப்படவுள்ளன.
இவைத் தவிர, வசதி குறைந்த குடும்பங்களுக்கு, பிரதேச வாரியாக உதவிகளும் மாணவர்களுக்குக் கற்றல் உபகரணங்கள், சீருடைத் துணிகள் முதலானவற்றை வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேற்படி நிகழ்வுகளில், தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.திலகராஜ், மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான எம்.உதயகுமார், சோ.ஸ்ரீதரன், எம்.ராம், மகளிர் அணித் தலைவி சரஸ்வதி சிவகுரு, இளைஞர் அணித் தலைவர் பா.சிவநேசன், தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.பிலிப், தேசிய அமைப்பாளர் ஜி.நகுலேஸ்வரன் உட்பட நகரசபை, பிரதேசசபை உறுப்பினர்கள் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
28 minute ago
32 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
32 minute ago
1 hours ago