Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2020 ஜனவரி 14 , பி.ப. 05:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.ஏ.எம்.பாயிஸ்
மூடப்பட்டுள்ள பலாங்கொடை நொன்பேரியல் வீதியைத் திறக்கும் நோக்கில், தோட்ட நிர்வாகத்துடன் பேச்சுவாரத்தை நடத்த, சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ, நாளை (15), ஸ்தலத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
பொதுமக்களின் நடவடிக்கைகளுக்கு பாதகமாக மூடப்பட்டுள்ள பலாங்கொடை நொன்பேரில் வீதியை உடனடியாகத் திறக்குமாறு, இரத்தினபுரி மாவட்ட கமிட்டிக் கூட்டத்தில் விடுக்கப்பட்ட பணிப்புரையையும் தோட்ட நிர்வாகம் உதாசீனம் செய்து வருவதால், இம்புல்பே பிரதேச சபைக்குட்பட்ட நொன்பேரியில் தோட்டத்தில் சர்ச்சை நிலவிவருகின்றது.
இரத்தினபுரி மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டத்தின்போது, இது தொடர்பாக நடைபெற்ற கலந்துரையாடலையடுத்து, இவ்வீதியைத் திறக்க பணிப்புரை விடுக்கப்பட்டிருந்த போதிலும், தோட்ட நிர்வாகம் இந்த வேண்டுகோள் நிறைவேற்றியிருக்கவில்லை.
இந்த வீதி மூடப்பட்டுள்ளமையால், இந்த வீதியில் போக்குவரத்து மேற்கொண்டு வரும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இதற்கு நிரந்தரத் தீர்வொன்றைக் காணும் பொருட்டே, ஸ்தலத்துக்கு, சப்ரகமுவ மாகாண ஆளுநர் நாளை (15), விஜயம் செய்யவுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
22 minute ago
9 hours ago