2021 மார்ச் 03, புதன்கிழமை

பல பெருந்தோட்டங்கள் முடங்கியன

Gavitha   / 2021 ஜனவரி 18 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

உடபுஸ்ஸலாவ பெருந்தோட்ட நிர்வாகத்தின் கீழ் இயங்கும் நுவரெலியா மாவட்டத்துக்குரிய அனைத்து பெருந்தோட்ட பகுதிகளும் இன்று (18), காலை முதல், அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் குதித்துள்ளனர்.

கந்தப்பளை பார்க்  தோட்ட  அதிகாரி  அஜித் பீரிஸ், அவரின் மனைவி ஆகியோர், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிதிச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரனை, அலைபேசியூடாக, தகாத வார்த்தையில் ஏசியதை அடுத்து, பார்க் தோட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் பணிப்பகிஷ்கரிப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாகவே, இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், இன்ற பார்க் தோட்டம், இராகலை, உடபுஸ்ஸலாவ, கந்தப்பளை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்கள் இன்று பணிப்பகிஸஷ்கரிப்பில் குதித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .