2021 மார்ச் 01, திங்கட்கிழமை

பெருந்தோட்ட நிறுவனங்கள் சர்வாதிகாரியாக முடியாது

Editorial   / 2021 ஜனவரி 20 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

மகேஸ்வரி விஜயனந்தன்
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் பெருந்தோட்ட நிறுவனங்கள் சர்வாதிகாரியைப் போன்று செயற்பட முடியாதென தெரிவித்த, அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல, தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் அரசாங்கம் தலையிடும் என்றார்.

நேற்று (19) அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1,000 ரூபாயாக அதிகரிப்பது குறித்து பிரதமர் பாராளுமன்றத்தில் உரையாற்றினார். எனவே இதில் எந்த சந்தேகமும் இல்லை.
இது மிகவும் சிக்கலான பிரச்சினை, கடந்த காலங்களின் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தில் 50 ரூபாயைக் கூட அதிகரிக்க முடியாத நிலையில் இருந்து வந்துள்ளோம்.

சம்பள அதிகரிப்பை வழங்க வேண்டும் என்ற கொள்கை ரீதியான தீர்மானத்தை நாம் எடுத்துள்ளதால், இதிலிருந்து நழுவிச் செல்லாமல், அதனை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்கின்றது என்றார்.

எனவே இந்த சம்பள அதிகரிப்பு விடயத்தில் எவருக்கும் சர்வாதிகாரியாக செயற்பட முடியாது. இது தொடர்பான தீர்மானங்களை எடுக்கின்ற போது, முதலாளிமார் சம்மேளனம் தமது கருத்துகளை தெரிவிக்க முடியும். ஆனால்; கொள்கை ரீதியான தீர்மானங்களை எடுக்கின்ற போது, அரசாங்கம் தலையிட்டு தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .