Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2021 ஜனவரி 17 , மு.ப. 08:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரத்தில், தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த இறுதித் தீர்மானத்தையும் தொழிற்சங்கங்கள் ஏற்றுக்கொள்ளத் தவறும் பட்சத்தில். அது கூட்டு ஒப்பந்தத்தை இரத்து செய்ய வழிவகுக்கும் என்றும் அதனுள் உள்ள அனைத்து விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் பூஜ்யமாகவும் வெற்றிடமாகவும் மாறி, அதன்பிறகு நாம் சம்பள சபைக்கு மட்டுமே செல்லவேண்டிய நிலை ஏற்படும் என, இலங்கை முதலாளிமார் சம்மேளனத்தின் பெருந்தோட்ட சேவைகள் பிரிவின் தலைவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக மேலும் தெரிவித்துள்ள அவர், இத்திட்டம், தொழிலாளர்களுக்கு உயர்ந்த வருமானத்தைப் பெற்றுக்கொள்ள உதவியாக இருக்கும் என்றும் இந்த வரைவு மாதிரிக்கு அமைய வருமானத்தில் 30% அதிகரிப்புக்கு உதவலாம் என்றும் அத்துடன் உற்பத்தித்திறன் அடிப்படையிலான முறைமையின் கீழ் தொழிலாளர்கள் அதிக வருமானத்தை சம்பாதிக்க முடியும் என்றும் தெரிவித்தார்.
இது பெருந்தோட்டத் துறையின் முழுத் தொழிலையும் நவீனமயமாக்குவதற்கான முதல் படியாகும் என்றும் காலனித்துவ சகாப்தத்தின் நினைவுச்சின்னமாகவும் புதுப்பித்தலுக்கான நீண்ட கால தாமதமாகவும் இருக்கும் ஒரு அடிப்படை நாளாந்த சம்பள முறையை தாண்டிய ஒரு நடவடிக்கையாகவே உள்ளது என்றும் கூறினார்.
இப்போது, தொழிற்சங்கங்களன் வேண்டுகோளாக இருந்த, 1,000 ரூபாய் சம்பளத்தைத் தாங்கள் தாண்டிச் சென்றுள்ளதாகவும் இது முன்பிருந்த ஒப்பந்தத்தில் இருந்ததைவிட, 40% அதிகரிப்பாகும் என்றும் கூறினார்.
ஆடை, சுற்றுலா துறையின் சம்பளங்கள் குறைக்கப்பட்டு, தொழிலாளர்கள் தொழில்களை இழக்கும் தருணத்தில், எமது ஊழியர்களை தொற்றுநோய்களின் எதிர்மறையான தாக்கங்களிலிருந்து பாதுகாத்து, சம்பள உயர்வை அதிகரிக்க எடுத்தத் தீர்மானம் முக்கியமாகும் என்றும் அவர் கூறினார்.
“நாங்கள் பல திட்டங்களை சமர்ப்பித்துள்ளேம். அவை அனைத்தும் தொழிற்சங்கங்களால் நிராகரிக்கப்பட்டுள்ளன. அவை எந்தவொரு சிறந்த சாத்தியமான மாற்றுத் திட்டத்தையும் சமர்ப்பிக்க தவறிவிட்டன. நாம் முன்வைக்கும் அனைத்து திட்டங்களையும் குறிப்பிட்டத்தக்க விதத்தில் அரசியல் ரீதியில் எதிர்ப்பதற்கு அணிவகுத்து நிற்பதை எம்மால் புரிந்து கொள்ள முடிந்துள்ளது. ஆனாலும் தொழிலாளர் வருமானத்தை அதிகரிப்பதை நாங்கள் எதிர்க்கவில்லை என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
“எவ்வாறாயினும், எங்கள் இறுதி தீர்மானத்தை அவர்கள் ஏற்றுக்கொள்ளத் தவறினால், அது கூட்டு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வழிவகுக்கும், அதனுள் உள்ள அனைத்து விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் பூஜ்யமாகவும், வெற்றிடமாகவும் மாற்றும். அதன்பிறகு நாம் சம்பள சபைக்கு மட்டுமே செல்ல முடியும். இது நாங்கள் எடுக்க விரும்பும் ஒரு நடவடிக்கை அல்ல, ஏனெனில் இது தொழிலாளர்களுக்கு சிறந்த ஒப்பந்தத்தை வழங்காது. ஆனால் ஒரு கூட்டு ஒப்பந்தம் இல்லாமல், இதுவே ஒரே வழி” என்று அவர் மேலும் கூறினார்.
16 minute ago
17 minute ago
53 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
17 minute ago
53 minute ago
1 hours ago