2020 ஓகஸ்ட் 10, திங்கட்கிழமை

’விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவேன்’

Editorial   / 2019 டிசெம்பர் 08 , பி.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

தனக்கெதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பில், பூரண விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் அதற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்குத் தான் தயாராக உள்ளதாகவும், மாத்தளை மாநகரசபையின் முதல்வர் டில்ஜித் அலுவிஹார தெரிவித்தார்.

டில்ஜித் அலுவிஹார, மாத்தளை மாநகர சபையின் முதல்வராக செயற்பட்ட காரத்தில், பல்வேறு மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகவும் அவை தொடர்பாக பூரண விசாரணைகளை நடத்துமாறு கோரியும், மாத்தளை மா நகரசபையின் உறுப்பினர்கள் சிலர், மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ.கமகேவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாகக் கருத்து தெரிவித்த அவர், தான் அனைத்து நடவடிக்கைளையும் சட்டதிட்டங்களுக்கு அமைவாகவே மேற்கொண்டதாகவும் சபையின் அனைத்து நடவடிக்கைளையும் உறுப்பினர்களது அனுமதியுடனே செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

எனவே எனக்கெதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பில், மத்திய மாகாண ஆளுநர் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், அதற்குத் தான் ஒத்துழைப்பு வழங்கிச் செயற்படத் தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--